Tuesday, June 21, 2005

தெரியாமத்தான் கேக்குறேன் - 3


"புருஷனைப் பார்க்கிறதுக்கு முன்னால இருந்தே பூவும் பொட்டும் வெச்சிட்டுதானே இருந்திருக்கேன்... அப்படியிருக்கறப்போ, சும்மா இடையில வந்து பேருக்கு புருஷனா வாழ்ந்தவருக்காக நான் ஏன் பூவையும் பொட்டையும் இழக்கணும்னு தோணுச்சு! தாலி, புருஷன் வந்த பிறகு வந்துச்சு. அதை மட்டும் அத்து எறிஞ்சா போதும்னு உறுதியா இருந்துட்டேன். நான் எடுத்த சந்தோஷமான முடிவுல அதுவும் ஒண்ணு." அப்படின்னு நம்ம மனோரமா ஆச்சி சொல்லியிருக்காங்க. காஞ்சி பிலிம்ஸ் கூட தன் பதிவுல இதை பதிஞ்சிருக்கார்.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா, இஸ்லாம் இதத்தான் அப்பவே சொல்லியிருக்கு. இறந்து போன புருஷனுக்காக மனைவி தனது வழக்கமான அலங்காரங்களை துறந்துவிட்டு வெள்ளை உடை அணியத்தேவையில்லை. விதவை அபசகுனமானவளல்ல. ஒரு பெண் திருமணமானபிறகு கணவன் பெயரை தன் பெயருடன் இணைத்தும் தனது தனித்தன்மையை இழக்கவும் தேவையில்லை.

நான் தெரியாமத்தான் கேக்குறேன்,

- இஸ்லாம் என்றாலே 'பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது, அவர்களின் உரிமையை பறிக்கிறது' என்றெல்லாம் வாய் கிழிய பேசுபவர்களுக்கு இந்த விபரமெல்லாம் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிக்கிறார்களா?

இப்படிக்கு

அப்பாவி

7 Comments:

At 11:54 AM , Blogger neyvelivichu.blogspot.com said...

//ஒரு பெண் திருமணமானபிறகு கணவன் பெயரை தன் பெயருடன் இணைத்தும் தனது தனித்தன்மையை இழக்கவும் தேவையில்லை.//

நிஜமாகவே இப்படி இருக்கிறதா.. எல்லா இஸ்லாமிய பெண்களும் கணவன் பெயரை பின்னால் இட்டுக் கொள்வதில்லையா? வரவேற்கப்படவேண்டிய விஷயம். யாராவது தெளிவு படுத்துங்களேன்..

அன்புடன் விச்சு

நிறைய தமிழ் குடும்பங்களில் இந்த பழக்கம் இருக்கிறது என்பதை அவதானித்திருக்கிறேன்.. என் தாயும் சகோதரியும் மனைவியும் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை. யாரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறவில்லை.

 
At 4:30 AM , Blogger நல்லடியார் said...

This comment has been removed by a blog administrator.

 
At 4:35 AM , Blogger நல்லடியார் said...

என்னைப் பொறுத்தவரை, கணவன் பெயரை, சேர்த்துக் கொள்வதாலோ அல்லது தந்தையின் பெயரை சேர்த்துக் கொள்வதாலோ ஒரு பெண்ணின் நிலை உயர்ந்ததாக கருத முடியாது. வேண்டுமானால் அடையாளப் படுத்த இவ்வாறு செய்யலாம்.

எனினும், கணவன் பெயரை சேர்த்துக் கொள்வதை விட, தந்தையின் பெயரை சேர்ப்பதே நடைமுறை சிக்கலைத் தவிர்க்கும்.

எவ்வாறெனில் கணவன் இறந்த பிறகு அல்லது விவாகரத்தாகி மறுமணம் செய்வதாக வைத்துக் கொள்வோம், அப்போது முன்பே அறியப்பட்ட கணவனின் பெயரால் அழைப்பதா அல்லது புதிய கணவனின் பெயரில் அழைப்பதா என்ற குழப்பம், தந்தை பெயரை இணைப்பதில் இல்லை. மேலும் கல்யாணத்திற்கு முன்பே கூட தந்தையின் பெயரை செர்ர்த்துக் கொள்ள முடியும்.

அராபியப் பெண்கள், தங்கள் கணவனை அழைக்கும் போது தன் குழந்தையின் பெயரை கணவனின் பெயருடன் 'அபூ' என இணைத்து அழைப்பதை வழக்கமாகக் கொள்கிறர்.

இதில் தந்தை பெயர் மட்டும் இணைப்பது ஆணாதிக்கம் அல்லது பெண்ணடிமைத்தனம் என்பவர்களுக்கு என்னிடம் விளக்கம் இல்லை.

என்னைப் பொறுத்தவரை அவரவருக்கு இடப்பட்ட பெயரிலேயே அழைப்பது மெத்த சிறந்தது எனத் தெரிகிறது. நன்றி விச்சு.

 
At 10:44 AM , Blogger அபூ முஹை said...

விச்சு, மற்றும் நல்லடியார் இருவருக்கும்!

தந்தையின் பெயரை இணைப்பது பெண்களுக்கு மட்டுமென்றால் அதை ஆணாதிக்கம் என்று சொல்லலாம், ஆண்கள், பெண்கள் இருபாலரையுமே அவர்களின் தந்தையின் பெயரையும் சேர்த்துச் சொல்லும்படி இஸ்லாம் சொல்கிறது.

''நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். (திருக்குர்ஆன், 33:5)

நல்லடியாருக்கு!
ஈஸா இப்னு மர்யம் (அலை) தவிர மற்ற அனைவரும் இன்னாரின் மகன் - மகள் இன்னார் என்று தந்தையின் பெயருடனேயே அழைக்கப்படுவார்கள் மறுமையில். இந்த நபிமொழியை நினைவூட்டுகிறேன். நன்றி!

 
At 9:16 AM , Blogger நல்லடியார் said...

நன்றி, அபூமுஹை!

 
At 12:30 AM , Blogger Mahesh said...

Nice to hear that Islam is treating Women with dignity. What about PURDHA system.. I am also an appavi.. Pls explain..

Romba Appavi.

 
At 11:50 PM , Blogger Salahuddin said...

மஹேஸ்,

பர்தாவைப்பற்றி ஒரு சிறு விளக்கம்:

இஸ்லாத்தின் பார்வையில் பர்தா எனப்படும் ஆடைக்கு சில குறைந்தபட்ச தகுதிகள் உண்டு. அவை,
1. பெண்களின் ஆடை அவர்களின் முகம், கை ஆகியவற்றைத்தவிர பிற பாகங்களை மூடியதாக இருக்க வேண்டும்
2. உடல் அமைப்புகள் தெரியும் வண்ணம் இறுக்கமாக இருக்கக்கூடாது
3. மிக மெல்லியதாக (see-through) இருக்கக்கூடாது ஆகியவையே.

சாதாரணமாக பெண்கள் அணியும் ஆடைக்கு இந்த தகுதிகள் இருந்தால், அந்த சாதாரண ஆடையே பர்தாதான். இதற்கென தனியாக ஒரு ஆடை அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

- சலாஹுத்தீன்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home