Tuesday, October 14, 2008

திராவிடர்னா யாருங்கோ?

திராவிடர் கழகம்

திராவிட முன்னேற்ற கழகம்

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (இதுலெ ரெண்டு இருக்குதாமே!)

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (விஜயகாந்த்)

அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (டி.ராஜேந்தர்)

தந்தை பெரியார் திராவிட கழகம் (கொளத்தூர் மணி)

தமிழக திராவிட மக்கள் கட்சி (இப்படி ஒன்னு இருக்குதாம்)

எம்ஜிஆர் எஸ்எஸ்ஆர் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (இப்போ இல்லை)

எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (திருநாவுக்கரசரோட முன்னாள் கட்சி)

திராவிட தெலுங்கு முன்னேற்ற கழகம் (அப்படி ஒன்னு இருந்துச்சாம். அப்பாலே பிஜேபி கூட ஐக்கியமாயிடுச்சாம்!)

திராவிட விழிப்புணர்ச்சி கழகம் (இப்படியும் ஒன்னு இருக்குதாம்)

1960-களிலிருந்து இத்தனை கட்சிகளும் கழகங்களும் 'திராவிடர்'களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் 'திராவிட' கட்சிகளான திமுக-வும் அஇஅதிமுக-வும்தான் மாறி மாறி தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கின்றன. அப்படின்னா 'திராவிடர்கள்' ரொம்ப கொடுத்து வச்சவங்களாத்தான் இருக்கணும். 'திராவிடர்'களின் ஆட்சிதானே இங்கே நடக்குது? இந்த 50 ஆண்டு காலகட்டத்தில் 'திராவிடர்கள்' நல்ல முன்னேற்றம் அடைஞ்சிருக்கணுமே!

ஆமா.. 'திராவிடர்'னா யாருங்கோ?

Labels: ,

அட விடுங்கப்பா ரஜினியை!

நானும் ரஜினி ரசிகன்தான்..! ரஜினி ஒரு நல்ல entertainer. லாஜிக் பத்தியெல்லாம் யோசிக்கலேன்னா அவரோட படங்களை யார் வேணாலும் ரசிச்சு பார்க்கலாம். அவர் ஒரு நடிகர். காசு வாங்கிக்கிட்டு அவர் அந்தத் தொழிலை செய்கிறார். ஒரு பஸ் டிரைவர், ஒரு அலுவலக குமாஸ்தா, இவங்கள்லாம் சம்பளம் வாங்கிட்டு அவங்களுக்கு தெரிஞ்ச வேலையை செய்யுறாங்க. அதைப்போல ரஜினியும் தனக்குத் தெரிந்த நடிக்கும் வேலையை நல்லாவே செய்றாரு. ஒரே ஒரு வித்தியாசம், மத்தவங்களை விட ரஜினியை மக்களுக்கு நல்லா தெரியும். என்னை மாதிரி ரொம்பப் பேருக்கு அவரோட நடிப்பு பிடிக்கும். அவருக்குத் தெரிஞ்ச வேலையை (மட்டும்) அவரை பார்க்க விடுங்களேன்!

எங்க ஊர் டவுன் பஸ் டிரைவரை எனக்கு நல்ல பழக்கம். நல்லா சிரிச்சு சிரிச்சு பேசுவார். நான் எங்கே நின்று கையைக் காட்டினாலும் பஸ்ஸை நிறுத்தி என்னை ஏற்றிச் செல்வார். அதுக்காக, "தலீவா, எனக்கு வயிற்று வலி.. அடுத்த ஞாயித்துக் கிழமை உன் வூட்டுக்கு வர்றேன்.. ஒரு ஆபரேஷன் பண்ணி வுட்ரு என்னா?" என்று அவரிடம் கேட்பேனா? யோசிச்சுப் பாருங்கப்பா!

Labels: ,

Sunday, August 20, 2006

இம்சை அரசன் இரண்டாம் 'புஷ்'கேசி!

இரண்டாம் ஜார்ஜ் புஷ் இருக்குற வரைக்கும் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது போல!

அண்ணாரு சீனாவுல சுற்றுப் பயணம் செய்தப்போ ஒரு கூட்டத்துல பத்திரிக்கையாளர்கள் ஏடாகூடமா கேள்வி கேட்கப்போக, பதில் சொல்ல முடியாம 'எஸ்ஸ்ஸ்கேஏஏப்....'ன்னு சத்தமா..... சொல்லாம, மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டு பக்கத்துல இருந்த கதவைப் பாத்து பாய்ஞ்சிருக்காரு. பாவம், அந்தக் கதவு பின்பக்கத்துல பூட்டி இருக்குன்ற விஷயம் அவருக்கு தெரியல.

அப்படியே 'பேஸ்த்' அடிச்சு அசடு வழிய கொஞ்ச நேரம் நின்னுட்டு, 'ஹி..ஹி.. எஸ்கேப் ஆக முடியல..!' அப்படின்னுட்டு இன்னொரு பக்கத்துல நைஸா நழுவிட்டாரு. இப்படி ஒரு நகைச்சுவை பர்ஃபார்மன்ஸை வடிவேலு கூட குடுக்க முடியாது போங்க!



மேலே உள்ள வீடியோ சரியா வேலை செய்யலேன்னா இந்த சுட்டியை சொடுக்கி அந்த அரிய காட்சியை கண்டு களியுங்கள்.

தலைப்பு உபயம்: ஆனந்த விகடன்

Monday, August 07, 2006

கோக்கு மாக்கு போட்டோ!


இந்த அக்காமாலா கம்பெனி இருக்குதே.. மன்னிக்கனும், கொக்கோகோலா கம்பெனி இருக்குதே, அவங்களுக்கு இந்தியால ஏற்கனவே இருக்குற பிரச்னை பத்தாதுன்னு, இன்னொரு பிரச்னைக்கு அடி போட்டிருக்காங்க..

பிரபல புகைப்படக்காரர் ஷரத் ஹக்ஸர் சென்னையில் வைத்த ஓரு புகைப்பட பேனர், அவங்களோட மதிப்பையும் மரியாதையையும் குலைக்குற மாதிரி இருக்குதாம். 'அதை உடனடியா அகற்றலேன்னா ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுவோம்'னு ஷரத்தை மிரட்டியிருக்காங்க. 'உங்களால முடிஞ்சதை செஞ்சிக்கோங்க'ன்னு சொல்லிட்டாராம் ஷரத் ஹக்ஸர்.

ஹும்.. இவங்களுக்கு நேரம் சரியில்லை..!

Saturday, July 22, 2006

'மஸாஜ்' புஷ்

ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கும் G8 மாநாட்டில் அமெரிக்க அதிபர் புஷ்ஷிடமிருந்து மஸாஜ் பெறுபவர் ஜெர்மனி அதிபர் ஆஞ்செலா மெர்கெல்.

Wow..! what a friendly President.. !

Thursday, July 20, 2006

மேஜிக்!

மேஜிக்-னாலே வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் பிடிக்குற ஒரு விஷயம். மேஜிக் பண்ணுறதை சின்ன பசங்க ஆச்சரியமா பார்ப்பாங்க. பெரியவங்க 'இதை எப்படி செய்யுறாங்க?' மூளையை கசக்கிக் கிட்டு யோசனை பண்ணுவாங்க.

இதோ, இந்த் லின்க்-ல ஒரு மேஜிக் இருக்குது. செஞ்சு பாத்து என்ஜாய் பண்ணுங்க. இதுக்கு விடை தெரிஞ்சவங்க இந்த அப்பாவிக்கு ஒரு கடுதாசு (பின்னூட்டத்துல) போடுங்க. சரியா?

Friday, July 14, 2006

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

விகடன்.காம் முகப்புப் பக்கத்துல 'ரிலாக்ஸ் ப்ளீஸ்'ன்னு ஒரு சுட்டி இருக்குது. 'மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்' மாதிரி புதுசா எதுனாச்சும் தொடர் ஆரம்பிச்சிருக்காங்களான்னு உள்ளே போய் பாத்தா.... அம்புட்டும் இளம் நங்கைகளின் வண்ணப் படங்கள். குழம்பிப் போய் 'பேக்' அழுத்தி (BACK -ங்க!) முன் பக்கத்து வந்து பாத்தா... தலைப்பு 'ரிலாக்ஸ் ப்ளீஸ்'தான். சந்தேகமேயில்லை!

தெரியாமத்தான் கேக்குறேன்... இவங்க ரிலாக்ஸ் பண்ணுறதுக்கு பொம்பளப் புள்ளைங்க படம்தான் கேக்குதா? இதுதான் தாய்க்குலத்துக்கு இவங்க தர்ற மதிப்பா? ஆம்புளங்க ரிலாக்ஸ் பண்ண பொம்பளப்புள்ளைங்க படம் போட்ட இவங்க, 'அவள் விகடன்'ல பொம்பளங்க ரிலாக்ஸ் பண்ண ஆம்பளப்பசங்க படம் போடலியே! பொம்பளங்கல்லாம் ரிலாக்ஸ் பண்ண வேண்டாமா? யாருக்காச்சும் பதில் தெரிஞ்சா சொல்லுங்க!

இப்படிக்கு

அப்பாவி

Monday, July 10, 2006

வித்தியாசமான விளம்பரங்கள்!

வித்தியாசமான சில விளம்பரங்களை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பி இருந்தார். அவற்றுள் எனக்கு பிடித்த சில படங்கள்:






எனக்கு ரொம்பப் பிடித்த விளம்பரம் இது!