Wednesday, August 24, 2005

அயோக்கியமானந்தாவின் அருளுரைகள்!

(யார் யாரோ நகைச்சுவை பதிவு எளுதறாங்களே, நாமளும் ஒன்னு எளுதுனா என்னான்னு தோணுச்சு. அதான்.. எளுதிட்டேன். ஒரு முக்கியமான விஷயம்.. இதுல வர்ற கதாபாத்திரங்கள் உங்களுக்கு யாரையாவது
ஞாபகப்படுத்துணுச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பில்லே.. சொல்லிட்டேன்.)

சாமியார் அயோக்கியமானந்தா (சுருக்கமாக ‘அயோ.மா’, இன்னும் சுருக்கமாக வேணுமுன்னா ‘அய்யோ..அம்மா’!) பக்தர் தரிசனத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். நேற்று இரவு அடித்த திரவத்தின் தாக்கம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது. நடையில் லேசான தள்ளாட்டம். குடிலின் கதவை திறந்து வெளியே வந்தார். வெயில் சுள்ளென்று முகத்தில் அறைந்தது. கோபம் கொண்ட அயோமா சூரியனை அண்ணாந்து பார்த்து பலம் கொண்டமட்டும் காறி துப்பினார். அவரது எச்சில் அவரது முகத்திலேயே விழுந்து வழிந்தது. எரிச்சலடைந்த அயோமா அதை கையால் வழித்தெடுத்து அங்கியில் துடைத்துக் கொண்டார்.

பக்தகேடிகளில் ஒருவனான நாய்ப்பன்றி ஓடி வந்தான். ‘என்னா தலீவா லேட்டு?’

‘டேய் என்ன தலீவான்னு கூப்பிடாதேன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்? சரி, இன்னக்கி தரிசனத்துக்கு எத்தனை பக்தர்கள் வந்திருக்காங்க?’

‘இந்த பந்தாவுக்கு ஒன்னும் கொறச்சலில்லே’ என்று வாய்க்குள் முணுமுணுத்த நாய், ‘ஒரே ஒர்த்தர்தான் வந்திருக்காரு. அவரும் உங்கிட்டே எதோ கேய்வி கேக்கனுமாம்’ என்றான்.

‘கேள்வியா? என்கிட்டேயா?’ என்று சற்று பின்வாங்கிய அயோமா சுதாரித்துக் கொண்டு ‘சரி விடு பாத்துக்கலாம்’ என்றார்.

அவரது அங்கியில் மாற்றம் இருந்ததை அப்போதுதான் பார்த்த நாய், ‘என்ன தலீவா, (பல்லை கடித்துக் கொண்டு..) என்ன சாமி, புது அங்கியெல்லாம் குஜாலா போட்டிருக்கியே என்ன விஷயம்?’ என்றான். எப்போதும் காவி கெட்டப்பில் இருக்கும் அயோமா அன்று ஒருவித வெள்ளை அங்கி அணிந்திருந்தார்.

‘ஆமாடா, இப்பல்லாம் காவி கட்டுன சாமியாருங்களுக்கெல்லாம் நேரமே சரியில்லை. அதனால கொஞ்ச நாளக்கி கிரிஸ்டின் பாதர் கெட்டப்பில இருக்கலாம்னு அங்கி கலரை மாத்திட்டேன்.’

‘நீ உசாரான பார்ட்டி தலீவா, ஆனா உள்ளே போட்டுருக்குற காவி அங்கி அப்படியே பளிச்சுன்னு தெரியுது பாரு’ என்று அவரை உஷார்ப்படுத்தினான் நாய்.

‘அதெல்லாம் யாரும் பாக்க மாட்டாங்க.’ என்று தைரியம் சொல்லிக்கொண்ட அயோமா விசிட்டர் அறைக்கு விரைந்தார்.

அங்கு காத்திருந்தவர் தான் நுழைந்ததும் எழ முயன்றதாக கற்பனை செய்து கொண்டே ‘அமருங்கள், அமருங்கள்’ என்று சொல்லிவிட்டு தனது ஆசனத்தில் சென்று அமர்ந்தார்.

‘சாமி, உங்க கிட்டே சில கேள்விகள் கேட்கலாம்னுதான் வந்திருக்கேன்’ என்றார் விசிட்டர்.

‘எங்கிட்டேயே கேள்வியா? ஹா..ஹ்ஹா’ என்று நெர்வஸாக ஒரு சிரிப்பு சிரித்து ‘சரி கேளுங்கள்’ என்றார் அயோமா. ‘நீ என் பக்கத்துலேயே இருடா’ என்று நாயிடம் சைகை காட்டினார்.

‘உங்கள் கொள்கை என்ன?’

‘கொள்கையா?’ என்று சற்று யோசித்த அயோமா, ‘கொள்கை என்ன பெரிய கொள்கை? பக்கத்து மடத்துல சொல்றது எதையும் நம்பாதே. அதுதான் நான் சொல்றது’ என்றார்.

‘அப்படின்னா, வேறு எந்த மடம் சொல்றதையும் நம்பலாமா?’

‘ஆமாம்’

‘உங்க மடத்துக்கென்று வேறு கொள்கை எதுவும் இல்லையா?’

‘என்னை பாத்த கிரிஸ்டின் மாதிரி தெரியலையா? ஆனா எங்கிட்டே நீ கிரிஸ்டின் பத்தி கேக்கக்கூடாது.. நான் சொல்றது என்னன்னா பக்கத்து மடத்துல சொல்றதை நம்பாதே’

‘நீங்க எந்த மடத்து கொள்கையை நம்புறீங்க?’

திருப்பித்திருப்பி வரும் கேள்விகளால் எரிச்சலடைந்தார் அயோமா. கண்களை மூடிக்கொண்டு ஞான திருஷ்டியில் ஆழ்ந்தவர் போல பாவலா காட்டினார். அவரது நாலுகால் அடிப்பொடிகளில் ஒன்று, விசிட்டரை பார்த்து ‘வள்’ என்று குரைத்துவிட்டு சுருண்டு படுத்துக்கொண்டது.

‘சாமி, நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே?’ என்று அவரது நிஷ்டையை கலைத்தார் விசிட்டர்.

‘என்ன கேட்டே?’

‘நீங்க எந்த மடத்து கொள்கையை நம்புறீங்கன்னு கேட்டேன்?’

திரை மறைவிற்குள் புகுந்த நாய் அங்கிருந்து பேசினான், ‘அயாம் ‘இன்னா மண்ணோ’ ஸ்பீக்கிங்! தட் இஸ் த.. வாட் இஸ் த.. நெக்ஸ்ட் மடம்.. வொய் கேய்வி ஹியர்?’

‘டேய் என்னடா பினாத்துரே?’ என்று கத்தினார் அயோமா.

‘அது ஒன்னுமில்ல தலீவா, நான் தமிள்ல பேசுனா நான் யாருன்னு அந்தாளு கண்டுக்கிடுவான். அதான் இங்கிலீசுல பேசுனேன்’ என்று பதிலளித்தான் நாய் என்கிற இன்னா மண்ணோ.

சிஷ்யனின் புத்திசாலித்தனத்தை மனதுக்குள் வியந்த அயோமா, ‘சரி சரி நீ அங்கேயே இரு’ என்றார்.

கேள்வி தொடர்ந்தது, ‘நீங்க எந்த மடத்து கொள்கையை நம்புறீங்கன்னு கேட்டேன்?’

அயோமா முகத்தில் எரிச்சல் மண்டியது. கண்ணை மூடி மீண்டும் ‘நிஷ்டையில்’ ஆழ்ந்தவர், சிறிது நேரம் கழித்து கண்திறந்த போது அந்த விசிட்டர் இன்னும் அங்கேயே நிற்பதை கண்டார்.

‘என் கேள்வி..?’ என்றார் விசிட்டர்.

சுதரித்துக்கொண்ட அயோமா, ‘தேடுவீர் கண்டடைவீர்’ என்று ஒரு ‘அருளுரை’யை உதிர்த்துவிட்டு, விசிட்டர் மேலும் கேள்வி கேட்பதற்குள் விருட்டென்று எழுந்து உள்ளறைக்குள் சென்று மறைந்து விட்டார்.

விசிட்டர் குழப்பமான முகத்துடன் வெளியேறினார்.

உள்ளறைக்கு வந்த நாயிடம் அயோமா கேட்டார், ‘எப்படி அந்தாள மடக்குனேன் பாத்தியா? நான் எவ்வளவு பெரிய புத்திசாலின்னு நிரூபிச்சுட்டேன்ல!’.

தலையிலடித்துக்கொண்டான் நாய்.

1 Comments:

At 11:40 PM , Blogger அப்பாவி said...

ஆரோக்கியம் என்கிற வியாதி,

"ஆரோக்கியபுலிப்பன்றினோமினேசகுமார்"

உம்மோட பேரு நல்லா இருக்கு ஓய்! உம்மோட ஊரு 'இந்தியமலேசியமெரிக்கா'வா?

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home