டென்னிஸ் பெண்களுக்கு ஒரு dress code தேவை: சோ
ஆனந்த விகடன் பேட்டியில் சோ சொன்னது:
கேள்வி: "புயல் வேகத்தில் வெற்றியைக் குவித்து, சர்வதேச அரங்கில் முன்னேறி வரும் சானியா மிர்ஸாவின் உடை குறித்து இப்போது பிரச்னை கிளப்புகிறார்களே, அது பற்றிய உங்கள் பார்வை என்ன?"
பதில்: "சானியா மிர்ஸா என்றில்லை... பொதுவாகவே டென்னிஸ் ஆடுகிற பெண்களின் உடை சின்னதாகிட்டே இருக்கு. இது விளையாட்டு வசதிக்காக பண்ற காரியம் மாதிரி தெரியலை. டென்னிஸ் ஆடுகிற ஆண்கள் எல்லாம் முட்டி வரைக்கும் ஷார்ட்ஸ் போட்டு ஆடுறப்போ, பெண்களின் உடை மட்டும் குறைஞ்சுட்டே இருக்குதுன்னா என்ன அர்த்தம்?
சானியா மிர்ஸா ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை மட்டும் தனிப்படுத்தி இந்த விஷயத்தை விமர்சிப்பது தவறு. டென்னிஸ் ஆடுகிற அத்தனை பெண்களுக் கும் பொதுவான ஒரு டிரெஸ் கோட் கொண்டுவந்தால் நல்லது!"
1 Comments:
ஜனங்க சானியாவை மறந்துட்டு இப்போ குஷ்புவை புடிச்சுக்கிட்டாங்க. இருந்தாலும், நான் தெரியாமத்தான் கேக்குறேன், சானியாவோட டிரஸ் பத்தி ஒரு முஸ்லிம் முல்லா கமென்ட் குடுத்தார்ங்குறதுக்காக குதி குதின்னு குதிச்சவங்கல்லாம் இப்போ எங்கே போயிட்டாங்க?
சம்பந்தமில்லாத டாபிக்காக இருந்தாலும் குழலி ஒரு பதிவுல சொன்ன கருத்து இங்கே அப்படியே பொருந்துது. "உங்களக்கு பிடிக்காதவர் எது செய்தாலும் அதை கேலி,கிண்டல் செய்பவர்களே, உங்களுக்கு பிடிக்காதவர் சொன்னார் என்பதற்காக தமிழ் உணர்வை கேலி செய்கின்றீரே! நாளை உங்களுக்கு பிடிக்காத அவர் எல்லோரும் அவரவர்கள் தாயை நேசிக்க வேண்டும் என்று கூறினால் உங்கள் நிலை என்ன? அப்போதும் இதே மாதிரியான எதிர்நிலையை எடுப்பீர்களா? உங்களுக்கு தமிழ் உணர்வு உள்ளதா? இல்லையா?!" - நன்றி குழலி!
'தாயின் காலடியில சொர்க்கம் இருக்கு'ன்னு முஸ்லிம் முல்லாக்களிலேயே ஆகச்சிறந்த முல்லா, அதுதாங்க முஹம்மது நபி, சொல்லியிருக்காரு. இஸ்லாம் சொல்ற எதையுமே எதிர்மறையாவே பாத்து பழகிப்போனவங்க என்ன செய்வாங்க? பாவம் அவங்களோட தாய்மார்கள்!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home