'அரசியல் ஆறு'
இந்த அப்பாவி மனுசன சும்மா 'அக்கடா'ன்னு இருக்க வுடாம, என்னமோ 'ஆறு' போடுற வெளயாட்டாமே, அதுல இழுத்து வுட்டுட்டாரு நல்லடியாரு. சின்னபுள்ளத் தனமால்ல இருக்கு!
இருந்தாலும், நம்மள மதிச்சு ஆட்டத்துல சேத்துக்கிட்டதால, சமீபத்துல நான் ரொம்ப ரசிச்ச 'அரசியல் ஆறை' சொல்றேன். கேட்டுக்குங்க!
1. வைகோவையும், சரத்குமாரையும் (கொசுறாக ராதிகாவும்..) தம் பக்கத்தில் வரவழைத்து, திமுக கூட்டணியை 'கலகல'க்க வைத்த அம்மாவின் 'தில்லு'.
2. 'தமிழக மக்களுக்கு நான் என்னையே இலவசமா தர்றேன்'ன்னு சொல்லி, கூடவே 'இதே போன்ற அறிவிப்பை எதிரணியினர் செய்ய முடியுமா?'ன்னு கேட்ட கலைஞரின் 'ஏ' க்ளாஸ் 'பஞ்ச்'.
3. கலைஞரின் இலவச அரிசி அறிவிப்பை கடுமையா தாக்கி பேசின சூடு ஆறுமுன்னாலே 'அம்மா' அதைவிட சூப்பர் அறிவிப்பு வெளியிட்டதால, வைகோ வாங்குன 'ஜகா'.
4. வைகோ - தயாநிதி மாறனின் 'ஆம்பளையா நீ?' 'ஒண்டிக்கு ஒண்டி வர்றியா நைனா?' போன்ற 'வீர வசனங்கள்'.
5. நடிகை சிம்ரனின் 'வோட் ஃபார் ட்டூ லீவ்ஸ்' என்ற 'செந்தமிழ் சூறாவளி பிரச்சாரம்'.
6. இடுப்பு பேக், கூலிங் கிளாஸ் சகிதமா தேர்தல் களத்தை ஒரு கலக்கு கலக்குன நடிகர் கார்த்திக்.
அவ்ளோவ்தான்..! ஆள வுடுங்கப்பு..!
7 Comments:
உங்க ஆறு சும்மா சொல்ல கூடாது. ஒரு சூப்பர் சிக்ஸர். பிடியுங்கள் ஒரு குத்தை.
ஆனா அப்பாவி ஆட்க எழுதுன மாதிரி இல்லையே. விவரமான ஆளு எழுதுன மாதிரி இருக்கு.
குத்துக்கு ரொம்ப நன்றிங்ணா! நாம எப்பவும் அப்பாவி தாங்ணா! உங்கள மாதிரி நாலு வெவரமான ஆட்களோட பதிவெல்லாம் படிக்குறதால, பூவோட சேர்ந்த நாறு மாதிரி அப்பப்போ ஏதாவது தோன்றதை எளுதுரதோட சரிங்ணா!
மறுக்கா நன்றிங்ணா!
உண்மையிலேயே அப்பாவி தான் நீங்கள்... தேர்தல் முடிஞ்சு டிவி யும் குடுக்க போறாங்க ... இப்ப போயி அரசியல் ஆற போட்டு இருக்கிங்க.
எங்காயாவது சின்னப்புள்ளையப் பத்தி சொல்றமாதிரி 'சின்னப் புள்ளத் தனமா இருக்கு'னு காதுல விழுந்தா எங்க வருத்தப்படாதா வாலிபர் சங்கத்திலேர்ந்து யாராவது ஓடிவந்துடுவோம்.
இப்படிக்கு சங்கத்தின் அன்பன்
வ.வா சங்கம் (http://vavaasangam.blogspot.com)
//தேர்தல் முடிஞ்சு டிவி யும் குடுக்க போறாங்க ... இப்ப போயி அரசியல் ஆற போட்டு இருக்கிங்க.//
அது வந்துங்ணா.. இதெல்லாம் அடுத்த தேர்தல் வர்ற வரைக்கும் நம்ம மனசுல நீங்காத இடத்தை புடிச்சுருக்குல்லா..!
//எங்காயாவது சின்னப்புள்ளையப் பத்தி சொல்றமாதிரி 'சின்னப் புள்ளத் தனமா இருக்கு'னு காதுல விழுந்தா எங்க வருத்தப்படாதா வாலிபர் சங்கத்திலேர்ந்து யாராவது ஓடிவந்துடுவோம்.//
அடா..அடா.. சங்கத்து மேலா பற்றுன்னா இப்படித்தான் இருக்கோணும்.. உங்க கடமை உணர்ச்சியை நெனச்சா அப்படியே புல்லரிக்குதுங்ணா!
அரசியல்ல இதெல்லாம் சகஜங்கறதப் புரிஞ்சுக்காம இருக்கும் நீங்கள் மீண்டுமொருமுறை அப்பாவி என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.
Neenga Appaviya.... appadinnu solla vakkira mathiri ezhuthureenga....
I really enjoy your writing style....
KAVANDA MANI MADRI SOLANMANAA
SUPER APPU
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home