Tuesday, October 14, 2008

அட விடுங்கப்பா ரஜினியை!

நானும் ரஜினி ரசிகன்தான்..! ரஜினி ஒரு நல்ல entertainer. லாஜிக் பத்தியெல்லாம் யோசிக்கலேன்னா அவரோட படங்களை யார் வேணாலும் ரசிச்சு பார்க்கலாம். அவர் ஒரு நடிகர். காசு வாங்கிக்கிட்டு அவர் அந்தத் தொழிலை செய்கிறார். ஒரு பஸ் டிரைவர், ஒரு அலுவலக குமாஸ்தா, இவங்கள்லாம் சம்பளம் வாங்கிட்டு அவங்களுக்கு தெரிஞ்ச வேலையை செய்யுறாங்க. அதைப்போல ரஜினியும் தனக்குத் தெரிந்த நடிக்கும் வேலையை நல்லாவே செய்றாரு. ஒரே ஒரு வித்தியாசம், மத்தவங்களை விட ரஜினியை மக்களுக்கு நல்லா தெரியும். என்னை மாதிரி ரொம்பப் பேருக்கு அவரோட நடிப்பு பிடிக்கும். அவருக்குத் தெரிஞ்ச வேலையை (மட்டும்) அவரை பார்க்க விடுங்களேன்!

எங்க ஊர் டவுன் பஸ் டிரைவரை எனக்கு நல்ல பழக்கம். நல்லா சிரிச்சு சிரிச்சு பேசுவார். நான் எங்கே நின்று கையைக் காட்டினாலும் பஸ்ஸை நிறுத்தி என்னை ஏற்றிச் செல்வார். அதுக்காக, "தலீவா, எனக்கு வயிற்று வலி.. அடுத்த ஞாயித்துக் கிழமை உன் வூட்டுக்கு வர்றேன்.. ஒரு ஆபரேஷன் பண்ணி வுட்ரு என்னா?" என்று அவரிடம் கேட்பேனா? யோசிச்சுப் பாருங்கப்பா!

Labels: ,

2 Comments:

At 7:25 PM , Blogger நாமக்கல் சிபி said...

/தலீவா, எனக்கு வயிற்று வலி.. அடுத்த ஞாயித்துக் கிழமை உன் வூட்டுக்கு வர்றேன்.. ஒரு ஆபரேஷன் பண்ணி வுட்ரு என்னா?" என்று அவரிடம் கேட்பேனா? //

:)

நீங்களாக திடீர்னு கேக்க முடியாது!

ரொம்ப நாளா நான் டாக்டரா ஆனாலும் ஆவேன். இல்லாட்டி இல்லை!

நேத்து மனுஷன், இன்னிக்கு டிரைவர்.. நாளைக்கு டாக்டர்..

ஆபரேஷன் எப்படி பண்ணுவேன் என்னிக்கு பண்ணுவேன்னெல்லாம் தெரியாது. ஆனா பண்ண வேண்டிய நேரத்துல கரெக்டா பண்ணிடுவேன்"

இப்படியெல்லாம் சொல்லிகிட்டு திரிஞ்சிகிட்டிருந்தா..

கடைசி அறிக்கைல

"நான் டாக்டரா வரணும்னு யாரும் வற்புறுத்த முடியாது.. அதேசமயம் நான் டாக்டராகணும்னு முடிவெடுத்துட்டா யாராலும் தடுக்க முடியாது... அதுவரைக்கும் நீங்க விருப்பப்பட்ட கிளினிக்ல போயி ஆபரேஷன் பண்ணிக்கலாம்... நான் கிளினிக் ஆபரேஷன் ஆரம்பிக்கும்போது இங்க வந்து அட்மிட் ஆனா போதும்" னு உங்ககிட்டே அந்த டிரைவர் சொன்னா... உங்களுக்கு பைத்தியம் பிடிக்குமா பிடிக்காதா?

 
At 7:38 PM , Blogger அப்பாவி said...

//"நான் டாக்டரா வரணும்னு யாரும் வற்புறுத்த முடியாது.. அதேசமயம் நான் டாக்டராகணும்னு முடிவெடுத்துட்டா யாராலும் தடுக்க முடியாது... அதுவரைக்கும் நீங்க விருப்பப்பட்ட கிளினிக்ல போயி ஆபரேஷன் பண்ணிக்கலாம்... நான் கிளினிக் ஆபரேஷன் ஆரம்பிக்கும்போது இங்க வந்து அட்மிட் ஆனா போதும்" னு உங்ககிட்டே அந்த டிரைவர் சொன்னா... உங்களுக்கு பைத்தியம் பிடிக்குமா பிடிக்காதா?//

பதிவை விட உங்க பின்னூட்டம் சூப்பர்ங்ணா!

டிரைவர் சொல்றதைக் கேட்டு ஒருக்கால் எனக்கு பைத்தியம் பிடிச்சதுன்னா, அதுக்கு வைத்தியம் பார்க்க யாருட்ட போறதுன்னு யோசிக்குறேன்.. பஞ்சாயத்து போர்டு குமாஸ்தாவா? அல்லது மட்டன் கடை பாயா?

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home