Friday, July 14, 2006

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

விகடன்.காம் முகப்புப் பக்கத்துல 'ரிலாக்ஸ் ப்ளீஸ்'ன்னு ஒரு சுட்டி இருக்குது. 'மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்' மாதிரி புதுசா எதுனாச்சும் தொடர் ஆரம்பிச்சிருக்காங்களான்னு உள்ளே போய் பாத்தா.... அம்புட்டும் இளம் நங்கைகளின் வண்ணப் படங்கள். குழம்பிப் போய் 'பேக்' அழுத்தி (BACK -ங்க!) முன் பக்கத்து வந்து பாத்தா... தலைப்பு 'ரிலாக்ஸ் ப்ளீஸ்'தான். சந்தேகமேயில்லை!

தெரியாமத்தான் கேக்குறேன்... இவங்க ரிலாக்ஸ் பண்ணுறதுக்கு பொம்பளப் புள்ளைங்க படம்தான் கேக்குதா? இதுதான் தாய்க்குலத்துக்கு இவங்க தர்ற மதிப்பா? ஆம்புளங்க ரிலாக்ஸ் பண்ண பொம்பளப்புள்ளைங்க படம் போட்ட இவங்க, 'அவள் விகடன்'ல பொம்பளங்க ரிலாக்ஸ் பண்ண ஆம்பளப்பசங்க படம் போடலியே! பொம்பளங்கல்லாம் ரிலாக்ஸ் பண்ண வேண்டாமா? யாருக்காச்சும் பதில் தெரிஞ்சா சொல்லுங்க!

இப்படிக்கு

அப்பாவி

7 Comments:

At 1:03 AM , Blogger யாத்ரீகன் said...

tension-ah keedhey.. relax panna andha photos keedha ?! ;-)

 
At 1:12 AM , Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அட என்ன இப்படி அப்பாவியா இருக்கீங்க பொண்ணுங்க படம் போட்டா பொண்ணுங்க ரிலாக்ஸ் ப்ளீஸுக்கு போயி அவங்க போட்டிருக்கிற நகை, டிரெஸ் எல்லாம் பாத்து ரிலாக்ஸ் பண்ணிகிடுவாங்க, ஆம்பளும் பாக்க வேண்டியதைப் பாத்து (ஹிஹிஹி...) ரிலாக்ஸ் பண்ணிகிடுவாங்க... ஆம்பள படத்தைப் போட்டா யார் பாப்பா? என்னா பேசுறீங்க?

 
At 1:26 AM , Blogger அப்பாவி said...

//யாத்திரீகன் said...
tension-ah keedhey.. relax panna andha photos keedha ?! ;-) //

இந்த அப்பாவியை வம்புல மாட்டி உட்டுர்றதுன்னு முடிவு பண்ணிட்டிங்க போல. விகடன்.காம் pay-site தெரியும்தானே? அவங்களோட முகப்புப் பக்கத்தை காப்பி-பேஸ்ட் பண்ணுனதுக்கே ஏதாவது 'காப்பி-பேஸ்ட் ரைட்' சட்டத்துல கேஸ் போட்டுடுவாங்களோன்னு நான் பயந்துக்கிட்டிருக்கேன்.. :-((

 
At 1:30 AM , Blogger அப்பாவி said...

//குமரன் எண்ணம் said...
அட என்ன இப்படி அப்பாவியா இருக்கீங்க பொண்ணுங்க படம் போட்டா பொண்ணுங்க ரிலாக்ஸ் ப்ளீஸுக்கு போயி அவங்க போட்டிருக்கிற நகை, டிரெஸ் எல்லாம் பாத்து ரிலாக்ஸ் பண்ணிகிடுவாங்க,..//

ஓஹோ.. இப்படி ஒன்னு இருக்கா? இதுக்குத்தான் எதையும் 'பல கோணங்கள்'ல பாக்கணும்னு சொல்றதா?

 
At 2:25 AM , Blogger ரவி said...

இதுதான் பின் நவீனத்துவ மதவாத தனி ஆவர்த்தன ஆனாதிக்க புலம்பெயர் வெறிமொழி அப்படீங்கறது....

<< கண்டிப்பா குழம்புவீங்க தானே >>

இப்போ அழகா போய் ரிலாக்ஸ் பன்னுங்க

 
At 2:55 AM , Blogger அப்பாவி said...

<< கண்டிப்பா குழம்புவீங்க தானே >>

ஒஹோ.. அப்படியா சங்கதி!

'எழுத்துப்பிழை' சார்! இங்க பாருங்க, ரவி ரெண்டு மிஸ்டேக் பண்ணியிருக்காரு..!!

 
At 10:46 PM , Anonymous Anonymous said...

அப்பாவியின் அப்பாவித்தனம் ரசிக்கும் படியாக உள்ளது.

சரியான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். பெண்ணியம் பேசும் "சிறந்த பெண்ணியவாதிகளுக்கு" இதெல்லாம் எங்கே கண்ணில் பட போகிறது.

//இதுதான் பின் நவீனத்துவ மதவாத தனி ஆவர்த்தன ஆனாதிக்க புலம்பெயர் வெறிமொழி அப்படீங்கறது....//

கொடுமப்பா. ஒண்ணும் புரியல. ரிலாக்ஸ் பண்ண வந்த இடத்துல தலய பிச்சிகிட வச்சிட்டீங்களே. :-)

அன்புடன்
இறை நேசன்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home