Tuesday, October 14, 2008

திராவிடர்னா யாருங்கோ?

திராவிடர் கழகம்

திராவிட முன்னேற்ற கழகம்

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (இதுலெ ரெண்டு இருக்குதாமே!)

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (விஜயகாந்த்)

அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (டி.ராஜேந்தர்)

தந்தை பெரியார் திராவிட கழகம் (கொளத்தூர் மணி)

தமிழக திராவிட மக்கள் கட்சி (இப்படி ஒன்னு இருக்குதாம்)

எம்ஜிஆர் எஸ்எஸ்ஆர் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (இப்போ இல்லை)

எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (திருநாவுக்கரசரோட முன்னாள் கட்சி)

திராவிட தெலுங்கு முன்னேற்ற கழகம் (அப்படி ஒன்னு இருந்துச்சாம். அப்பாலே பிஜேபி கூட ஐக்கியமாயிடுச்சாம்!)

திராவிட விழிப்புணர்ச்சி கழகம் (இப்படியும் ஒன்னு இருக்குதாம்)

1960-களிலிருந்து இத்தனை கட்சிகளும் கழகங்களும் 'திராவிடர்'களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் 'திராவிட' கட்சிகளான திமுக-வும் அஇஅதிமுக-வும்தான் மாறி மாறி தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கின்றன. அப்படின்னா 'திராவிடர்கள்' ரொம்ப கொடுத்து வச்சவங்களாத்தான் இருக்கணும். 'திராவிடர்'களின் ஆட்சிதானே இங்கே நடக்குது? இந்த 50 ஆண்டு காலகட்டத்தில் 'திராவிடர்கள்' நல்ல முன்னேற்றம் அடைஞ்சிருக்கணுமே!

ஆமா.. 'திராவிடர்'னா யாருங்கோ?

Labels: ,

6 Comments:

At 4:13 AM , Blogger நையாண்டி நைனா said...

/*ஆமா.. 'திராவிடர்'னா யாருங்கோ?*/

'திராவிடர்'னா ...இந்த மாதிரி கேள்வி கேப்பவர் அல்ல..அல்ல... அல்ல..
எவர் ஒருவர் கேள்வி கேட்காமல், கொடுத்த 100 ரூபாய்க்கு ஓ ட்டு போடுகிறாரோ அவரே... திராவிடர்... திராவிடர்..திராவிடர்...

 
At 9:08 AM , Blogger Thamizhan said...

இந்தியாவில் கிருத்துவ,இஸ்லாமிய மதத்தினர் அல்லாத அனைவரும் "இந்துக்கள்".
ஆரியத்தின் அடி வருடிகளாக இல்லாத அனைவரும் திராவிடர்கள்.திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்.
திராவிட என்ற நாட்டுப் பகுதியில்
வாழ்பவர்கள் அனைவரும் திராவிடர்கள் அல்லர்.ஆனால் திராவிட நாட்டைச் சேர்ந்தவர்கள். "ர்" ஒரு எழுத்தின் மகிமை அது.
திராவிட நாட்டில் திராவிடர்கள்,மற்றும் நரிகள்,ஓநாய்கள்
திராவிட என்று சொல்லி வாழ்கின்றதுதான் தெரிந்து கொள்ள வேண்டியது.
சிலருக்குப் புரிந்தும் புரியாதது போல நடிப்பார்கள்!

 
At 7:54 PM , Blogger அப்பாவி said...

//'திராவிடர்'னா ...இந்த மாதிரி கேள்வி கேப்பவர் அல்ல..அல்ல... அல்ல..
எவர் ஒருவர் கேள்வி கேட்காமல், கொடுத்த 100 ரூபாய்க்கு ஓ ட்டு போடுகிறாரோ அவரே... திராவிடர்... திராவிடர்..திராவிடர்...//

நைனா சார், 'திராவிடர்...திராவிடர்..திராவிடர்...னு மூனு தரம் சொல்றது ஏலம் போடுற மாதிரி இருக்கே? :)

 
At 7:59 PM , Blogger அப்பாவி said...

//திராவிட நாட்டில் திராவிடர்கள்,மற்றும் நரிகள்,ஓநாய்கள்
திராவிட என்று சொல்லி வாழ்கின்றதுதான் தெரிந்து கொள்ள வேண்டியது.
சிலருக்குப் புரிந்தும் புரியாதது போல நடிப்பார்கள்!//

தமிழன் சார், அப்படின்னா திராவிடப் பெயரில் கட்சி நடத்துபவர்களெல்லாம் திராவிடர்கள் அல்ல என்கிறீர்களா?

 
At 8:58 PM , Blogger அறிவகம் said...

/ஆமா.. 'திராவிடர்'னா யாருங்கோ?/

மிக சரியான கேள்வி

கட்சி பேர் வைக்க கூட சிந்திக்க திறனில்லாதவர்களுக்கு பெரியார் விட்டுக்சென்ற வழிகாட்டி சொல்தான் திராவிடம் என்றாகி விட்டது.

தங்கள் கட்சி கொள்கைகளை விளக்காவிட்டாலும் பரவாயில்லலை. கட்சி பேருக்காவது விளக்கம் சொல்வாங்களா?

அப்படி எந்த கட்சியாலையும் விளக்கம் சொல்ல முடியாவிடால், திராவிடம் என்றால் தமிழர் தலையை மொட்டையடித்து அதில் மிளகரைக்கும் சொல் என அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்.

 
At 9:41 PM , Blogger அப்பாவி said...

//கட்சி பேர் வைக்க கூட சிந்திக்க திறனில்லாதவர்களுக்கு பெரியார் விட்டுக்சென்ற வழிகாட்டி சொல்தான் திராவிடம் என்றாகி விட்டது.//

அறிவகம் சார், நீங்க சொல்றது சரிதான். 'திராவிடர்' என்ற பெயருக்கு ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அளவுகோல் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். சிலருக்கு அவங்க மகன் / மகள் / பேரன் / பேத்தி.. சிலருக்கு அவங்களோட உடன்பிறவா சகோதர உறவுகள்.. சிலருக்கு அவங்களோட மனைவி / மைத்துனர் இப்படி... சுருக்கமா சொல்லணும்னா அந்த கட்சியை வச்சு யாரையெல்லாம் முன்னேற்றுராங்களோ அவங்கள்லாம் 'திராவிடர்கள்'. சரியா?

அப்ப மத்தவங்கள்லாம்?

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home