Friday, September 23, 2005

வந்துட்டம்ல!

நம்ம அயோக்கியம் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்காக. மூர்த்தியாக இருந்து முகம்மது அப்துல்லாவாக மாறியவரின் சவ அடக்கம் பற்றி மலேசியா ஷாரியா நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஒரு தமிழருக்கு நேர்ந்த அநியாயமாம்.

அண்ணாச்சி, தமிழரா இருந்த மூர்த்தி முகம்மது அப்துல்லாவாக மாறுனப்புறம் மலாய்காரரா ஆயிடமாட்டாரு. அப்பவும் தமிழர்தான்.

இதே விஷயத்தைப் பத்தி இப்னு பஷீர் கூட ஒரு பதிவு எளுதியிருக்காரு. முடிஞ்சா அவரு கேக்குற கேள்விக்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுங்க!

//எந்த ஷாரியத் நீதிமன்றமும், முஸ்லீமல்லாதவர்களுக்கு அநீதியானவைதான்// அப்படின்னு சொல்லியிருக்கீங்களே, சூப்பர்ங்கண்ணா! நீங்க மலேசியாவுலதானே இருக்கீங்க? அதெப்படி மலேசியாவோட சட்டதிட்டங்கள்லாம் கசக்குது, மலேசியாவோட காசு மட்டும் இனிக்குதா உங்களுக்கு? உங்க அடிப்பொடி 'பார்வை' சொல்லியிருக்குற மாதிரி GET THE HELL OUT! அப்படின்னு வெளியேறி இருக்க வேணாமா? என்னமோ போங்க!

உங்க பதிவுல பின்னூட்டம் குடுத்தா நீங்க மட்டுறுத்துடுவீங்கன்னு தெரிஞ்சுதான் இங்க எளுதுறேன்.

டென்னிஸ் பெண்களுக்கு ஒரு dress code தேவை: சோ


ஆனந்த விகடன் பேட்டியில் சோ சொன்னது:

கேள்வி: "புயல் வேகத்தில் வெற்றியைக் குவித்து, சர்வதேச அரங்கில் முன்னேறி வரும் சானியா மிர்ஸாவின் உடை குறித்து இப்போது பிரச்னை கிளப்புகிறார்களே, அது பற்றிய உங்கள் பார்வை என்ன?"


பதில்: "சானியா மிர்ஸா என்றில்லை... பொதுவாகவே டென்னிஸ் ஆடுகிற பெண்களின் உடை சின்னதாகிட்டே இருக்கு. இது விளையாட்டு வசதிக்காக பண்ற காரியம் மாதிரி தெரியலை. டென்னிஸ் ஆடுகிற ஆண்கள் எல்லாம் முட்டி வரைக்கும் ஷார்ட்ஸ் போட்டு ஆடுறப்போ, பெண்களின் உடை மட்டும் குறைஞ்சுட்டே இருக்குதுன்னா என்ன அர்த்தம்?

சானியா மிர்ஸா ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை மட்டும் தனிப்படுத்தி இந்த விஷயத்தை விமர்சிப்பது தவறு. டென்னிஸ் ஆடுகிற அத்தனை பெண்களுக் கும் பொதுவான ஒரு டிரெஸ் கோட் கொண்டுவந்தால் நல்லது!"