Tuesday, October 14, 2008

திராவிடர்னா யாருங்கோ?

திராவிடர் கழகம்

திராவிட முன்னேற்ற கழகம்

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (இதுலெ ரெண்டு இருக்குதாமே!)

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (விஜயகாந்த்)

அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (டி.ராஜேந்தர்)

தந்தை பெரியார் திராவிட கழகம் (கொளத்தூர் மணி)

தமிழக திராவிட மக்கள் கட்சி (இப்படி ஒன்னு இருக்குதாம்)

எம்ஜிஆர் எஸ்எஸ்ஆர் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (இப்போ இல்லை)

எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (திருநாவுக்கரசரோட முன்னாள் கட்சி)

திராவிட தெலுங்கு முன்னேற்ற கழகம் (அப்படி ஒன்னு இருந்துச்சாம். அப்பாலே பிஜேபி கூட ஐக்கியமாயிடுச்சாம்!)

திராவிட விழிப்புணர்ச்சி கழகம் (இப்படியும் ஒன்னு இருக்குதாம்)

1960-களிலிருந்து இத்தனை கட்சிகளும் கழகங்களும் 'திராவிடர்'களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் 'திராவிட' கட்சிகளான திமுக-வும் அஇஅதிமுக-வும்தான் மாறி மாறி தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கின்றன. அப்படின்னா 'திராவிடர்கள்' ரொம்ப கொடுத்து வச்சவங்களாத்தான் இருக்கணும். 'திராவிடர்'களின் ஆட்சிதானே இங்கே நடக்குது? இந்த 50 ஆண்டு காலகட்டத்தில் 'திராவிடர்கள்' நல்ல முன்னேற்றம் அடைஞ்சிருக்கணுமே!

ஆமா.. 'திராவிடர்'னா யாருங்கோ?

Labels: ,

அட விடுங்கப்பா ரஜினியை!

நானும் ரஜினி ரசிகன்தான்..! ரஜினி ஒரு நல்ல entertainer. லாஜிக் பத்தியெல்லாம் யோசிக்கலேன்னா அவரோட படங்களை யார் வேணாலும் ரசிச்சு பார்க்கலாம். அவர் ஒரு நடிகர். காசு வாங்கிக்கிட்டு அவர் அந்தத் தொழிலை செய்கிறார். ஒரு பஸ் டிரைவர், ஒரு அலுவலக குமாஸ்தா, இவங்கள்லாம் சம்பளம் வாங்கிட்டு அவங்களுக்கு தெரிஞ்ச வேலையை செய்யுறாங்க. அதைப்போல ரஜினியும் தனக்குத் தெரிந்த நடிக்கும் வேலையை நல்லாவே செய்றாரு. ஒரே ஒரு வித்தியாசம், மத்தவங்களை விட ரஜினியை மக்களுக்கு நல்லா தெரியும். என்னை மாதிரி ரொம்பப் பேருக்கு அவரோட நடிப்பு பிடிக்கும். அவருக்குத் தெரிஞ்ச வேலையை (மட்டும்) அவரை பார்க்க விடுங்களேன்!

எங்க ஊர் டவுன் பஸ் டிரைவரை எனக்கு நல்ல பழக்கம். நல்லா சிரிச்சு சிரிச்சு பேசுவார். நான் எங்கே நின்று கையைக் காட்டினாலும் பஸ்ஸை நிறுத்தி என்னை ஏற்றிச் செல்வார். அதுக்காக, "தலீவா, எனக்கு வயிற்று வலி.. அடுத்த ஞாயித்துக் கிழமை உன் வூட்டுக்கு வர்றேன்.. ஒரு ஆபரேஷன் பண்ணி வுட்ரு என்னா?" என்று அவரிடம் கேட்பேனா? யோசிச்சுப் பாருங்கப்பா!

Labels: ,