Tuesday, June 21, 2005

தெரியாமத்தான் கேக்குறேன் - 3


"புருஷனைப் பார்க்கிறதுக்கு முன்னால இருந்தே பூவும் பொட்டும் வெச்சிட்டுதானே இருந்திருக்கேன்... அப்படியிருக்கறப்போ, சும்மா இடையில வந்து பேருக்கு புருஷனா வாழ்ந்தவருக்காக நான் ஏன் பூவையும் பொட்டையும் இழக்கணும்னு தோணுச்சு! தாலி, புருஷன் வந்த பிறகு வந்துச்சு. அதை மட்டும் அத்து எறிஞ்சா போதும்னு உறுதியா இருந்துட்டேன். நான் எடுத்த சந்தோஷமான முடிவுல அதுவும் ஒண்ணு." அப்படின்னு நம்ம மனோரமா ஆச்சி சொல்லியிருக்காங்க. காஞ்சி பிலிம்ஸ் கூட தன் பதிவுல இதை பதிஞ்சிருக்கார்.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா, இஸ்லாம் இதத்தான் அப்பவே சொல்லியிருக்கு. இறந்து போன புருஷனுக்காக மனைவி தனது வழக்கமான அலங்காரங்களை துறந்துவிட்டு வெள்ளை உடை அணியத்தேவையில்லை. விதவை அபசகுனமானவளல்ல. ஒரு பெண் திருமணமானபிறகு கணவன் பெயரை தன் பெயருடன் இணைத்தும் தனது தனித்தன்மையை இழக்கவும் தேவையில்லை.

நான் தெரியாமத்தான் கேக்குறேன்,

- இஸ்லாம் என்றாலே 'பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது, அவர்களின் உரிமையை பறிக்கிறது' என்றெல்லாம் வாய் கிழிய பேசுபவர்களுக்கு இந்த விபரமெல்லாம் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிக்கிறார்களா?

இப்படிக்கு

அப்பாவி

Monday, June 20, 2005

தெரியாமத்தான் கேக்குறேன்-2

நாடு ரொம்ப கெட்டுப்போச்சுங்க! தமிழ் இணையத்துல முகமூடிங்க ரொம்ப பெருகிட்டாங்க. (இங்க மட்டும் என்ன வாழுதாம்னு நீங்க கேக்குறது காதுல விழுது). இதுல பெரிய ஜோக் என்னன்னா, முகமூடிகளுக்குள்ளேயே டூப்ளிகேட் முகமூடியெல்லாம் வந்தாச்சு. ஆரோக்கியம் என்கிற முகமூடியோட பதிவுல புலிப்பாண்டிங்கிற முகமூடி புலம்பியிருக்காரு 'அந்தா மேல உள்ள கமெண்ட் என்னோடதில்ல. ஆரோ டூப்ளிகேட் புலிவேஷக்காரரோடது. நாந்தான் 'ஒரிஜினல்(?)' புலிவேஷம்' அப்படின்னு. சிரிப்பா இருக்குதில்ல? அய்யா, டூப்ளிகேட் அய்யா! என்னையும் இந்த மாதிரி புலம்ப விட்டுறாதீங்கய்யா! அப்படி ஏதாவது பண்ணுனீங்கன்னா நானும் டோண்டு அய்யா மாதிரி 'என்னுடைய பின்னூட்டங்கள்'னு ஒரு பதிவு ஆரம்பிச்சு போட்டு தாக்கிருவேன் (அல்வாசிட்டிகாரரே! உங்க பன்ச் டயலாக்கை 'காப்பி' அடிச்சுட்டேன். கண்டுக்காதீங்க!)

அய்யா புலிப்பாண்டி! நான் தெரியாமத்தான் கேக்குறேன்,

- சாதாரணமா குண்டு வெடிப்பு, தீவிரவாதம், ஆசிட் வீச்சு, பெண்ணடிமை போல விஷயங்களைத்தான் 'இஸ்லாம்' லேபிள் குத்துவாங்க. நீங்க என்னடான்னா இந்த டூப்ளிகேட் மாதிரி சீப்பான விஷயங்களுக்கெல்லாம் 'முஸ்லிம் வலக்கை, இடக்கை' அப்படின்னு என்னென்னவோ சொல்றீங்களே! இது உங்களுக்கே நியாயமா இருக்கா?

இப்படிக்கு
அப்பாவி

தெரியாமத்தான் கேக்குறேன்-1

கண்ணையும் மனசையும் சுத்தமா வச்சுக்காத ஆம்பிளைங்களுக்கு மதுர மல்லியக்காவோட பதிவுல 'நல்லா விழுந்துக்கிட்டிருக்கு'. அந்தப்பக்கம் இதுவரைக்கும் போகாதவங்க ஒருதரம் எட்டிப்பார்த்துடுங்க. "இன்னும் இப்படிப்பட்ட ஆண்கள் எத்தனை பேர் நம் சமூகத்திலே." அப்படின்னும் கேட்டிருக்காங்க. அது இருக்காங்க கொள்ளை பேரு!

நம்ம நல்லடியார் சொல்லியிருக்காரு, "போலி பெண்ணுரிமை பேசுபவர்கள் கவனிக்கவும்.இந்த வம்பே வேணாமுன்னுதான் இஸ்லாம் பர்தா அணியச் சொல்கிறது." அப்படின்னு.

நல்லா கவுனிங்க! இஸ்லாம் சொல்லுது, 'கெட்ட கெட்ட பசங்கள்லாம் இருக்காங்க, அதனால பொண்ணுங்களெல்லாம் கொஞ்சம் இழுத்து போர்த்திக்கினு போங்கோ'ன்னு. அதை புடிக்காதவங்க சொல்றாங்க, 'அந்தாளுங்க சொல்றதெல்லாம் கேட்காதே. அவங்க உன்னை அடிமைப்படுத்துறாங்க. உன்னை சுதந்திரமா விட மாட்டேங்குறாங்க. அதனால உனக்கு பிடிச்ச மாதிரி எப்படி வேணும்னாலும் நீ இருந்துக்கோ' அப்படின்னு.

நான் தெரியாமத்தான் கேக்குறேன்,
- இந்த மாதிரி 'பெண்ணுரிமை' பேசுறவங்க வீட்டு பொம்பள புள்ளங்க, vishytheking சொன்னமாதிரி NY கலாச்சாரத்தை பின்பற்றி டிரஸ் பண்ணனும்னு விரும்புனா, இவங்க இதே அறிவுரையை சொல்வாங்களா?
- இவங்களோட அறிவுரையை பின்பற்றுனா, மல்லியக்கா சலிச்சுக்குற மாதிரி 'சபலிஸ்டு'களுக்கு வசதி செஞ்சு கொடுத்த மாதிரி ஆயிடாதா?

நான் தெரியாமத்தான் கேக்குறேன். தெரிஞ்சவங்க யாராச்சும் பதில் சொல்லுங்க!

இப்படிக்கு
அப்பாவி